நாட்டில் மீண்டும் மலேரியா தொற்று பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் பல பகுதிகளிலிருந்தும் மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 20 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2016ஆம் ஆண்டில் மலேரியா தொற்றை ஒழித்த நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் நாட்டில் மீண்டும் மலேரியா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொதுமக்களுக்கு மலேரியா தொடர்பான சந்தேகங்களுக்கு 071-2841767 மற்றும் 0117626626 என்ற எண்களுக்கு 24 மணித்தியாலமும் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.