எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்துள்ளது.

இதன்படி, 95 ஒக்டேன் ரக பெட்ரோல் 20 ரூபாவால் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், புதிய விலை 365 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவால் அதிகரிகப்பட்டுள்ளதுடன், புதிய விலை 328 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.