யூலை 12இல் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம்

கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுசிறப்புமிகு ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு- தாந்தாமலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் 12.07.2023ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 02.08.2023ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவிருக்கின்றது.
கொடியேற்றத்திலிருந்து 21நாட்கள் கிராம ரீதியான திருவிழாக்கள் நடைபெற்று 02.08.2023ஆம் திகதி காலை 6மணிக்கு திருவோணநட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.