“துலங்கும் வர்ணங்கள்” கண்காட்சி நிகழ்வு

சாவகச்சேரி ரி.பி. ஹன்ற் ஞாபகார்த்த ஓவியக்கூடத்தின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழாவும்-ஆரம்ப பிரிவு மாணவர்களின் “துலங்கும் வர்ணங்கள்” கண்காட்சி நிகழ்வும் 24/06 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஹன்ற் ஓவியகூடத்தில் இடம்பெற்றிருந்தன.

ரி.பி.ஹன்ற் ஞாபகார்த்த ஓவியகூடத்தின் ஸ்தாபகர் திருமதி யோகமணி அழகரத்தினம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும் சிறப்பு விருந்தினராக சேர் பொன்னம்பலம் இராமநாதன் கலைப்பீட பீடாதிபதி ச.சிவரூபனும்,
கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கோ.கைலாசநாதன் ,யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி அதிபர் எல்.முகுந்தன்,பிறைட் அக்கடமி இயக்குநர் ஸ்ரீசுடரோன் மற்றும் வணபிதா.வசந்தகுமார் அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கண்காட்சி நிகழ்வினை பிரதம விருந்தினர் இளங்கோவன் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.