ஓட்டமாவடியில் தியாகிகள் நினைவுத் தூபி

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகாமையில் நினைவுத் தூபி திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது.

கல்குடா தியாகிகள் நினைவுத் தூபி குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது.

இதில், கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தத்தின் போது தாய் மண்ணையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க கல்குடா முஸ்லிம் பகுதியிலிருந்து உயிர் நீத்த வீரர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர் நீத்தவர்கள், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரதேச கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்கள் நினைவுகூறப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வின் போது, உயிர்நீத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், அதிதிகளாக பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிரதேச நலன் விரும்பிகள், எனப்பலரும்
கலந்து கொண்டனர்.