பட்டதாரிகள் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை – சஜித்

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் 443 பேருக்கு இன்னும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும்,அதுதொடர்பில் கவனம் செலுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(23) பாராளுமன்றத்தில்தெரிவித்தார்.

அமைச்சு சார்ந்த ஆலோசனைக் குழுவில் இது தொடர்பாக பிரதமர் சாதகமான பதிலை வழங்கியதால்,இதற்குஉடனடி தீர்வு காணுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.