கைத்தொழில் துறை அபிவிருத்திக்கு வடக்கில் வர்த்தக கண்காட்சி

வடமாகாணத்தில் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முதல் முதல் 13 ஆம் திகதி வரை யாழ்ப்பாண கலாசார மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளன.புதிய வர்த்தக தொடர்புகள் மற்றும் எதிர்கால வர்த்தக வாய்ப்புகளை கட்டியெழுப்பும் முயற்சியாகவும் வட மாகாண கைத்தொழில் வர்த்தக வணிகங்களின் தளமாகவும் இந்த வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி அமையுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.