கதிர்காம காட்டுவழி பாதயாத்திரையில் வனபூங்கா பகுதியில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

கனகராசா சரவணன்)

பொத்துவில் உகந்தை முருகன் ஆலையத்தில் இருந்து  கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாதை யாத்திரை சென்ற ஆண் ஒருவர் மீது இன்று வியாழக்கிழமை (22) மாலை 6 மணிக்கு குமுக்கன் வனப்பூங்கா இந்துகோவில் பகுதியில் வைத்து பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது நேத்திக்கடனை முடிப்பதற்காக உகந்தை முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்திற்கான  பாதையாத்திரையை ஆரம்பித்து சென்று கொண்டிருந்த நிலையில் சம்பவதினமான இன்று மாலை 6 மணியளவில்  குமுக்கன் வனப்பூங்கா இந்துகோவில் பகுதியில் காலில் பாம்பு ஒன்று தீண்டியதையடுத்து மயக்கமடைந்துள்ளர்.

இதனையடுத்து அந்த பகுதியில் முகாமிட்டு  மருத்துவசேவையில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் உடனடியாக அம்பிலன்ஸ் வண்டியில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த நிலையில்  வைத்திய சாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளதாக பொலிசரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோலில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை இரு தினங்களுக்கு முன்னர் கதிர்காம காட்டுவழி பாதையாத்திரையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது