மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு அறையின் கூரை உடைந்து வீழ்ந்ததில் சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இன்று வியாழக்கிழமை (22) பகல் 12 மணிக்கு இடம்பெற்றுள்ளது
குறித்த வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பரிவில் சம்பவதினமான இன்று பகல் 12 மணிக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது திடிரென அவசரசிகிச்சை பிரிவு அறையின் மேல் பொருத்தப்பட்டிருந்த அன்டசீற் உடைந்து வீழ்ந்துள்ளதையடுத்து அங்கு சிசிக்சை பெற்று வந்த 3 பேரும் எவ்வித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
இந்த கட்டிடத்தில் கூரையின் மேல் இருந்து குரங்கு பாய்ந்ததில் தான் இந்த மாதிரியான விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
எனவே புதிதாக கட்டிய வைத்தியசாலையின் கூரை குரங்கு பாய்ந்து உடைந்து விழும் அளவுக்கு தரமில்லாத வகையிலா நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தோ நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தான் மக்கள் தம் உயிரை காப்பாற்றி கொள்ள தான் வைத்தியசாலைக்கு செல்வார்கள்.
இந்நிலையில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உடைந்து விழும் நிலையில் அன்டசீற் நிர்மானிக்கப்பட்டுள்ளது எனவே அதிகாரிகள் கட்டிட நிர்மானத்தின் போது சரியாக செயற்படாததால் இந்த அனர்தம் இடம்பெற்றுள்ளதுடன் வைத்தியசாலை நிர்வாகம் அசமந்த போக்கே காரணம் என வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்தவர்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.
இதேவேளை இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் எடுக்கு வேண்டும். என்பதுடன் கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தில் இது போல் தரமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளை ஆராய்ந்து அவற்றை திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.