கல்முனை ஆதரவைத்தியசாலையில் 60 குருதிக்கொடையாளர்களை கௌரவித்த நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
இந் நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது வைத்தியசாலைக்கு நன்கொடைகள் வழங்கிய 60 கொடையாளர்கள் பாராட்டு நற்சான்றுகளும் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜெ மதன் வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை குழுவினரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் போது அம்பாறை மாவட்டம், கல்முனை, துரைவந்திமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச்சிறுமி அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.இவர் மாபெரும் இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்.
இவர் தனது இரண்டு கைகளாலும் A-Z வரை குறுகிய நேரத்தில் எழுதி அவர் படைத்த சாதனையை அவரே முறியடித்து 2 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
இவர் கல்முனை ஆதார வைத்திய சாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் திருமதி ஜெயந்தினி ஜனா சுகிர்தன் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.