சென்.ஜோன் அம்பியூலன்ஸ் சிறிலங்கா அமைப்பினால் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் முதலுதவி அறிமுகத்துடன் அமைந்த முதலுதவிப் பயிற்சிப்பட்டறை மாணவர்களுக்கு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொறியியலாளர் எம்.ரீ.கமால் நிசாத் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் கருத்துக்களை வழங்கினார்.
இந் நிகழ்வில் வளவாளர்களாக சென்.ஜோன் அம்பியூலன்ஸ் சிறிலங்கா அமைப்பின் அம்பாறை மாவட்ட ஆணையாளரான கெப்டன் எம்.ரீ. நௌஸாத் வபி மற்றும் உதவி ஆணையாளரான மேஜர் கே.எம்.தமீம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சிகளை
வழங்கினர்.
இதன்போது ஆசிரியர்களான ஏ.எல்.எம். இர்ஸாத், எம்.எஸ்.எம். நுஸ்கி, எஸ்.ஐ. நஸீஹாபேகம் உட்பட பழைய மாணவ சங்க செயலாளர் எம்.ஐ. சர்ஜுன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.