பேருந்து தரிப்பிட புணர் நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்விநிறுவனத்தின் முன்பாக பிரதான பாதையில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிட புணர் நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம் பெற்றது.

சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்விநிறுவனத்தின் (ATI) பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபா அவர்களின் ஆலோசனையின் கீழ் நஜா பவுண்டேசன் அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பகுதிநேர மாணவர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை உயர் தொழி நுட்பவியல் பணிப்பாளர் எஸ்.எல் கல்விநி றுவனத்தின்முஸ்தபா, நஜா பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எஸ்.எம் நபீல்,சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்விநிறுவனத்தின்ஆங்கில கற்கை துறை பொறுப்பாளர் எம்.பி நெளசாட்,கணக்கியல் துறை பொறுப்பாளர் பெரோஸ்,அதிபர்கள் ,நஜா பவுண்டேசன் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள்,கல்விசாரா ஊழியர்கள்மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள சமூக பொறுப்புணர்வு குறித்த குழுசெயற்திட்டத்திற்கு ஏற்ப இவ் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.