ஈஸ்ட் லகூன் ஹொட்டலில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறை.

(எருவில் துசி) இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை 18.06.2023 ஆம் திகதி ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான பயிற்சி பட்டறை காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை இடம் பெற்றது.

குறித்த பயிற்சி பட்டறையில் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக எவ்வாறு ஒரு ஊடகவியலாளர் தகவல் அறியும் சட்டத்தை பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் அது தொடர்பான சட்ட நுணுக்கத்தினையும் அந்த தகவல் அறியும் சட்டத்தை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது பற்றியும் மேலும் ஒரு ஊடகவியலாளர் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக பெறப்படுகின்ற தகவல்களைக் கொண்டு எவ்வாறு கட்டுரை வடிவாக தயாரித்து அதனை பிரசுரிக்க முடியும் என்பது தொடர்பாக பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இதற்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஆர்த்தி ரவிவர்மன் அவர்களும் விடிவெள்ளி பத்திரிகையின் எடிட்டர் எம்,வீ.எம்.பைருஸ் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு இந்த பயிற்சி நெறியினை சிறப்பான முறையில் ஊடகவியலாளருக்கு மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.