(வாஸ் கூஞ்ஞ) புனித ஆனாள் கல்வி மற்றும் அபிவிருத்தி வங்காலை குழுவானது கல்வி சேவையோடு விளையாட்டு துறையினையும் ஊக்குவிக்கும் முகமாக முதல் தடவையாக தலைமன்னார் பியர் அ.த.க.பாடசாலையின் கரப்பந்தாட்ட அணிக்கான விளையாட்டு சீருடையினை வழங்கி வைத்துள்ளது.
கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்குழு சுவிஸ் இணைப்பாளர் சுனேஸ் தெரிவிக்கையில்
தலைமன்னார் பியர் அ.த.க.பாடசாலையின் கரப்பந்தாட்ட அணிக்கான விளையாட்டு சீருடையானது 15.06.2023 அன்று வியாழக்கிழமை பாடசாலையின் பதில் கடமை அதிபரின் தலைமையில் இவ்சீருடைய வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
புனித ஆனாள் கல்வி மற்றும் அபிவிருத்தி வங்காலை குழுவானது கல்வி சேவையோடு விளையாட்டு துறையினையும் ஊக்குவிக்கும் முகமாக முதல் தடவையாக தலைமன்னார் பியர் அ.த.க.பாடசாலையின் கரப்பந்தாட்ட அணிக்கான விளையாட்டு சீருடையினை வழங்கி வைத்துள்ளது.
அதிபர் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் இவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக 18 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியினர் கரப்பந்தாட்ட போட்டியில் மாவட்ட மட்டத்தில் தெரிவாகி மாகாண மட்டத்திற்கு செல்லுவதற்காக காத்திருக்கும் நிலையில்
‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ என்னும் தொணிப்பொருளில் புனித ஆனாள் கல்வி மற்றும் அபிவிருத்தி குழு வங்காலை கிளை அமைப்பின் செயலாளர் திரு விக்மன் மார்க் , பொருளாளர் திரு அமல் சதீஸ் கூஞ்ஞ , அமைப்பின் அங்கத்தவர்களான திருமதி விஜிதா குலாஸ் மற்றும் ஜெயந்தன்.வாஸ் இவர்களின் பங்குபற்றுதலோடு
இவர்களுக்கான விளையாட்டு சீருடை வழங்கப்பட்டதோடு இந் நிகழ்வில் பாடசாலையின் பதில் கடமை அதிபர் , விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.