மட்டக்களப்பு சிறுவர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு சிறுவர்களின் உடல் உள  ஆரோக்கியத்தினை மேம்படுத்த மாவட்ட செயலகத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தின் 14 பிரதேச  செயலகத்தில்  காணப்படும்  சிறுவர்சபைக்கான விளையாட்டு உபகரணங்களை   வழங்கி வைக்கும்  நிகழ்வு   உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்  தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு  மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதேச சிறுவர்சபையூடாக  சிறுவர்களின்  உடல் உள  ரீதியான ஆரோக்கியத்தினை  மேம்படுத்தல்  மற்றும் பங்கேற்பு  உரிமையினை வழங்கும் நோக்கில் மாவட்ட செயலகத்தினால் யுனிசெப்  நிறுவனத்திடம்  முன்வைக்கப்பட்ட  வோண்டுகோளிற்கு அமைவாக  கிடைக்கப்பெற்ற விளையாட்டு உபகரணங்கள் இன்று 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யுனிசெப்  நிறுவன விசேட சிறுவர் பாதுகாப்பு நிபுணர் மரிண்டா ஆம்ஸ்ட்ரோங்,மண்முனை வடக்கு  உதவி பிரதேச செயலாளர்  சியாஹுல்ஹக்,மாவட்ட  சிறுவர் உரிமை  மேம்பாட்டு  இணைப்பாளர் ரீ.மதிராஜ்,மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி  உத்தியோகத்தர் வி.முரளிதரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிஷா, உளவள இணைப்பாளர் ஜனார்தனி நரசிம்மன்.  செரி நிறுவன பணிப்பாளர் தர்ஷன் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள்  பலர் கலந்து கொண்டனர்.