(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் எதிர்வரும் ஆடிமாத பெருவிழாவுக்கு மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.; மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்ட நுஸற்றாண்டு விழாவுக்கான ஆரம்ப நிகழ்வாக ஆயர் அவர்களால் யூபிலி பிரகடனம் செய்யப்படுவதுடன் அன்றைய தினம் ஆரம்ப நிகழ்வும் இடம்பெறும் என மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அடிகளார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் பிரசிதிப்பெற்ற மன்னார் மாவட்டத்தில் குடிகொண்டிருக்கும் மருதமடு அன்னையின் ஆடிமாத பெருவிழாவை முன்னிட்டு இன்றைய நாளில் அதாவத திங்கள் கிழமை (12) மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.
இச்கூட்டத்தில் பல்வேறுபட்ட திணைக்களத் தலைவர்கள் மடுத் திருப்பதி பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்து கொண்ட இக்கூட்டத்தைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அடிகளார் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
இக்கலந்துரையாடலில் மடுத் திருப்பதியின் ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு நடைபெற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பக்தர்களின் தேவைகளுக்கான நடைமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
குருமுதல்வர் மேலும் இங்கு தெரிவிக்கையில்
இந்த யூலை மாத பெருவிழாவை கடந்த வருடங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கடந்த வருடம் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வும் காணப்பட்ட நிலையிலேயே இவ்விழா நடைபெற்றது.
ஆனால் இவ்வருடம் இவ்வாறான எரிபொருள் தட்டுப்பாடு இல்லாதமையாலும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமையாலும் இவ்வருடம் சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கூட்டம் இவ்ஆடிமாத விழாவில் கலந்து கொள்வார்கள் என மன்னார் மறைமாவட்டம் எதிர்பார்க்கின்றது.
எதிர்வரும் 23 ந் திகதி மருதமடு அன்னையின் ஆடிமாத விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி ஆடி மாதம் இரண்டாம் திகதி (02.07.2023) காலை 6.15 மணிக்கு திருவிழாத் திருப்பலி நடைபெறும்
இதைத் தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சுரூப ஆசீருடன் திருவிழா நிறைவடையும். அத்துடன் இத்தினத்தில் இன்னொரு விழாவை முன்னெடுப்பதற்கு ஆரம்ப நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது.
அதாவது 1924 ஆம் ஆண்டு மருதமடு திருப்பதியிலே பல ஆயர்கள் ஒன்றுகூடி சூழ்ந்திருந்து மருதமடு அன்னைக்கு முடிசூட்டும் விழாவை மேற்கொண்டிருந்தனர்.
இவ்விழாவின் நூற்றாண்டு நிகழ்வை மன்னார் மறைமாவட்டம் யூபிலி பெருவிழாவாக 2024 ஆம் ஆண்டு அதாவது அடுத்த ஆண்டு யூலை மாதம் கொண்டாடப்பட இருக்கின்றது.
இதை முன்னிட்டு எதிர்வரும் யூலை மாதம் இரண்டாம் திகதி (02.07.2023) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ் யூபிலியை பிரகடனம் செய்ய இருக்கின்றார்.
இதைத் தொடர்ந்து நாம் மருதமடு அன்னையின் இவ்யூபிலியை வெளிப்படுத்தும் நோக்குடன் வருட முழுவதும் இந்த யூபிலி கொடி இந்த மருதமடு அன்னையின் ஆலய போட்டிக்கோவில் பறக்கவிடப்படும்.
இத்துடன் இந்த யூபிலி தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு யூலை இரண்டாம் திகதி வரை மன்னார் மறைமாவட்டம் முழுவதும் பல நிகழ்வுகள் இடம்பெறும் என இவ்வாறு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் தெரிவித்தார்.