( வி.ரி. சகாதேவராஜா)
யாழ். கதிர்காம பாதயாத்திரைக்
குழுவினர் 35 தினங்களில் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை உகந்த மலை முருகன் ஆலயத்தை வந்தடைந்தனர்.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமஆடிவேல்விழா உற்சவத்தையொட்டிய இலங்கையின் மிகநீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமப் பாதயாத்திரை இம் முறை ஜெயா வேல்சாமி தலைமையில் கடந்த மாதம் ஆறாம் தேதி யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியிலிருந்து யாத்திரையை மேற்கொண்டனர்.
வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகல 7மாவட்டங்களையும் இணைத்து 55நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாககருதப் படுகின்றது.
ஆனால் இம்முறை கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவ காலம் ஒருமாத காலம் முன்கூட்டியே அறிவித்ததால் பாதயாத்திரை காலத்தை 45 நாட்களாக சுருக்க வேண்டி நேரிட்டது.
அதன்படி 35 வது நாளில் நேற்று உகந்தை மலையை அடைந்து இன்று திங்கட்கிழமை காலை காட்டுக்குள் பிரவேசித்து 19 ஆம் தேதி கதிர்காமம் கொடியேற்றத்தை காணவிருக்கின்றனர்.