திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சருக்கு கௌரவிப்பு நிகழ்வு

எப்.முபாரக்
திருகோணமலை சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை சிறைச்சாலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக  சேவையாற்றி  இடமாற்றம் பெற்றுச் செல்லும் “வசந்த குமார டேப்” அவர்களுக்கான பிரியாவிடை கௌரவிப்பு வைபவம் நேற்று(10)  மாலை   திருகோணமலை சிறைச்சாலையில்  சங்கத்தின் தலைவர் திரு.பாஸ்கரன்  அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன் போது திருகோணமலை சிறைச்சாலையில் சிறைச்சாலை அத்தியட்சகராக கடமையாற்றிய அத்தியட்சகருக்கு சினைவுச் சின்னமும்,வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறைச்சாலை நலன்புரிச் சங்அத்தின் தலைவர்,உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.