ஹஸ்பர்_
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய வகையில் பால்நிலை வன்முறைக்கெதிரான கலந்துரையாடல் ஒன்று இன்று (10) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரனையில் நடைபெற்றது.
இதில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,சுகாதார துறை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் மகளிர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


