கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிலைபேண்தகு விவசாய அபிவிருத்தி வேலை திட்டத்தின் கீழ் செயல்பட்ட 22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று(09) திரூகோணமலையில் உள்ள மாகாண பிரதம செயலக அலுவலகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் வர்த்தக இராஜங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, மாகாண பிரதம செயலாளர் ரத்நாயக்க மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முதுபண்டா உட்பட அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.