காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் 2024 உயர்தர விஞ்ஞானத்துறையில் கற்கும் மாணவர்களை கனடாவில் வாழும் காரைதீவின் பற்றாளர் கார்டியோலஜிஸ்ற் வைத்திய கலாநிதி டாக்டர் அருளானந்தம் வரதராசா சந்தித்து, அவர்களது கற்றலில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை கேட்டறிந்து அதனை தீர்ப்பதற்கான முறைகளை மிகவும் தெளிவான முறையில் தெளிவுபடுத்தினார்.
TRAKS & ASCO அமைப்பின் ஸ்தாபகரான அவருடன், அதன் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இச்சந்திப்பு விபுலானந்தா மத்திய கல்லூர அதிபர் ம. சுந்தரராஜன் தலமையில் நடைபெற்றது.
விஞ்ஞான கணித மாணவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் சவால்களை கற்றல் இடர்பாடுகளை எடுத்துச் உரைத்தார்கள்.
டாக்டர் வரதராசா அதற்கான தீர்வுகளை வழங்கியதோட விஞ்ஞான கணிததுறை பொறுப்பாசிரியர் பத்மநாதன் கேதீஸ் ஒழுங்கமைப்பில் ஈடுபட்டார்.