சட்டவிரோத பொருட்களுடன் சிக்கிய கொள்கலன்

சட்டவிரோத பொருட்களுடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கொள்கலன் டுபாய் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலனில் இருந்து சுமாா் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்கலனில் இருந்து 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான அழகு சாதனப் பொருட்களும் மூன்று வாகனங்களை பொருத்தக்கூடிய உதிாிபாகங்களும், மதுபானம் மற்றும் சிகரெட் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாகன உதிாிபாகங்களை இறக்குமதி செய்யும் போா்வையில் குறித்த கொள்கலன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தொியவருகிறது.