இலங்கை சேவா சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ஆறுமுக நாவலர் அறப்பணி ஊடாக சேவா அமெரிக்கா நிதியுதவியுடன் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் பொருளாதார ரீதியில் சவாலை எதிர்நோக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன.
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பிரதேசத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 25 கிலோ அரிசி 25 கிலோ மா என்ற அடிப்படையில் இப்பொதிகள் நேற்று முன் தினம் (4) ஹோல்புறூக் ஆலய மண்டபத்தில் வழங்கப்பட்டன.
இலங்கை சேவா சர்வதேச அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீமான் இரா.விஜயபாலன்ஜி, இந்து ஸ்வயம் சேவக சங்க செயற்திட்ட இணைப்பாளர் சாந்தகுமார்ஜி ஆகியோர் தலைமையில் இப்பொதிகளை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் விசேட அதிதியாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாஸ கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார். இதன்போது இந்து ஸ்வயம் சேவக சங்க செயற்திட்ட இணைப்பாளர் சாந்தகுமார்ஜி அவர்களால் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாஸ பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.