காரைதீவு கண்ணகிக்கு கற்பூரச்சட்டி

கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் போது பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்கடன் செலுத்தி வருகின்றனர்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு நாளை 06 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெறும். எட்டாம் சடங்கு எதிர்வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை இடம் பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் பண்டைய கலாசார பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.