கொழும்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா

முத்தமிழறிஞர் ,கலைஞர் மு. கருணாநிதி நுாற்றாண்டு விழா கொழும்பிலும் வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நேற்று காலை 10.00மணிக்கு நடைபெற்றது.

இதன்போது தினகரன் ஆசிரியர் தே.செந்தில்வேலவர், தலைமையுரை முனைவர் சதிஸ்குமார் சிவலிங்கம். ஏற்புரை. மானவை அசோகன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் பிரதம அதிதி உரை, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தக் குமார், முன்னாள் அமைச்சர் தலைவர் தமிழ் முற்போக்கு முன்னி மனோ கனேசன், கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் ஜோகராஜன், மற்றும் வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன், உட்பட தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பிரநிதிகளும் அங்கு உரையாற்றினார்கள்.

மேலும் மு. கருநாநிதி பற்றிய கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.