கல்லடி பாலத்தில் மிதந்த மாணவியின் சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

22 வயதுடைய மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த மாணவி கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.