சர்வதேச தலசீமியா தின விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச தலசீமியா தின ஊர்வலம் ஹரிதாஸ் ஏகட் நிறுவன தலைவர் அருட் தந்தை ஜே.ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில், தலசீமியா செயற்திட்ட இணைப்பாளர் ஆர்.கே மேரி ஒழுங்கமைப்பில் இன்று (30) மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆலோசனையின் கீழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தோற்றா நோய்களில் ஒன்றான தலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் இந் நோய்யை கட்டுப்படுத்தும் நோக்கோடு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்க்காக “தலசீமியா நோய் பற்றி அறிந்து கொள்வோம், பகிர்ந்து கொள்வோம், நோயாளிகள் மீது அக்கறை கொள்வோம்” எனும் தொனிப்பொருளில் ஊர்வலம் காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமாகி சால்ஸ் மண்டபத்தினை வந்தடைந்தது.

இதன் போது வைத்திய அதிகாரிகளினால் தலசீமியா நோய் பற்றிய விழிப்புணர் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் இன் நோய் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் வாத்லட் மைதிலி, சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் கே.சித்திரா, சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் திருக்குமார் விஜி, மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டதுடன்,இந் நோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.