எழுத்தாளர் சண் தவராஜாவின் நூல் வெளியீட்டு விழா

மும்பை இலக்கியக் கூடம் சார்பாக எழுத்தாளர் சண் தவராஜாவின் (சுவிட்சர்லாந்து) ” காணாமல் போனவர்கள்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா கடந்த 28ம் திகதி ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பாண்டுப் பிரைட் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேவதாசனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் மும்பை இலக்கியக் கூடம் ஒருங்கிணைப்பாளர் வ.ரா.தமிழ் நேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, தமிழ் நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரியத்தின் உறுப்பினர் அலி சேக் மீரான் தலைமை தாங்கினார்.

லெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் அறிமுக உரை நிகழ்த்தி நூலின் முதல் பிரதியை வெளியிட மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை எழுத்தாளர் கரூர்.இரா.பழனிச்சாமி வெளியிட மும்பை இலக்கியக் கூடத்தின் புரவலர் சிவக்குமார் இராமச்சந்திரன்( உரிமையாளர், அன்னா கிரானா) அவர்களும் மும்பை இலக்கியக் கூடம் புரவலர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி மூன்றாம் பிரதியை வெளியிட மகிழ்ச்சி மகளிர் பேரவை நிர்வாகி வெண்ணிலா சுரேஷ் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக கெனிசா பழனி விக்னேசு தமிழ்த் தாய் வாழ்த்து பாடலைப் பாடி விழாவை துவக்கி வைத்தார்.

சமூக செயற்பாட்டாளர் கவிஞர் புதிய மாதவி, மும்பை இலக்கியக் கூடம் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் இறை.ச.இராசேந்திரன் ஆகியோர் நூல் குறித்த திறனாய்வு உரை நிகழ்த்தினர். நூலாசிரியர் சண்தவராஜா ஏற்புரை ஆற்ற. மும்பை இலக்கியக் கூடம் ஒருங்கிணைப்பாளர் முருகன் இராஜன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

மும்பை இலக்கியக் கூடம் புரவலர் எழுத்தாளர் சேதுராமன் சாத்தப்பன் , இந்திய பேனா நண்பர் பேரவை நிறுவனத் தலைவர் எம்.கருண், மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன், மும்பைத் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் மிக்கேல் அந்தோணி, ஜெரிமெரி தமிழ்ச் சங்க ஆலோசகர் ஜெ.பால்துரை, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் , பம்பாய்த் திருவள்ளுவர் மன்றத் தலைவர் மா.செல்வராஜ், ஜெரிமெரி தமிழ்ச் சங்க அறங்காவலர் குழுத் தலைவர் கோ.சீனிவாசகம், பீவண்டி கிளைக் கழகச் பொருளாளர் முஸ்தாக் அலி, அணுசக்தி நகர் கலை மன்ற செயலாளர் தேவராஜன் புலமாடன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ, ஜெரிமெரி தமிழ்ச் சங்க செயலாளர் இரா.செந்தில் குமார், பொருளாளர் ச.முருகன், பம்பாய்த் திருவள்ளுவர் மன்றம் ஆசிரியர் குமார் செல்வம்.கலாச்சார இயக்கத் தலைவர் கே.கண்ணன், பத்லாபூர் தமிழர் நலச் சங்க நிர்வாகி ஜெ.இரவிக்குமார் ஸ்டீபன் , மதிமுக மும்பை துணை அமைப்பாளர் தமிழ்மணி பாலா மருத்துவர் சீனிவாசன், ஆகியோர் நூலாசிரியரிடமிருந்து நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும், மும்பையில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழ் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.