பொதுமக்களின் அங்கலாய்ப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரை வீதியானது குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இவ் வீதியானது 18 வருடங்களுக்கு முன்னர் இடப்பட்டதாகவும், இவ்வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனாலும் , வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்வீதியை உரிய அதிகாரிகள் புனரமைத்து வழங்க வேண்டும் என்பதே இவ் வீதியால் பயணிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.