மக்கள் பிரச்சினைக்கு எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து தீர்வு.

உதாவக அரமும மஹியங்கனை வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கிராந்துரு கோட்டை வைத்தியசாலைக்கு இன்று(29) விஜயம் செய்தார்.கிராந்துரு கோட்டைவைத்தியசாலைக்குத் தேவையாக இருக்கும் சிறுநீரக நோயாளர் சிகிச்சை இயந்திரம் தொடர்பில் இதன் போது அறியக் கிடைத்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து இது தொடர்பான பிரச்சினை குறித்து தெரிவித்தார்.சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைக்குத் தேவையான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை தாம் வழங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சித்தலைவர் உறுதியளித்தார்.