கிழக்கில் தேசிய மர நடுகை தினம் ஆரம்பம்

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு தேசிய மரநடுகை தினம் இன்று காலை 10.00 மணிக்கு (28) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை நகரசபை வளாகத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் கிழக்கு மாகாண அரச உயர் அதிகாரிகள், திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் உட்பட நகரசபையின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.