இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை

மனித மேம்பாட்டு அமைப்பினால் இளைஞர், யுவதிகள், அமைப்பின் அங்கத்தவர்களுக்கான 6 கட்டங்களாக நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சி பட்டறையின் இறுதிக் கட்டம் தன்னம்பிக்கை உள்ள எதிர்கால இளைஞர் யுவதிகளை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு (27) சனிக்கிழமை வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

மனித மேம்பாட்டு அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.முகம்மட் அஸ்லத்தின் வழிகாட்டலிலும், அமைப்பின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஆர். அல்முன்தஸீரின் ஒருங்கிணைப்பிலும், அமைப்பின் வாழைச்சேனை பிரதேச அமைப்பாளரான இஸட்.எப். ஸிஹானி, ஓட்டமாவடி பிரதேச ஒருங்கிணைப்பாளரான இஸட்.எப். ஸிமானி ஆகியோர்களின் ஏற்பாட்டிலும் தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியான லெப்டினன் கேர்ணல் எம்.எச்.எம்.ரவூப் தலைமையிலும் இளைஞர் – யுவதிகளுக்கான விரிவுரைகளும், பயிற்சிகளும், கள செயற்பாடுகளும் இதன்போது நடாத்தப்பட்டது.

இப் பயிற்சி பட்டறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் – யுவதிகள் கலந்து கொண்டதுடன் அன்று மாலை லெப்டினன் கேர்ணல் எம்.எச்.எம்.ரவூப் அவர்களினால் கலந்து கொண்ட இளைஞர் – யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.