மன்னார் போலீசாரின் எச்சரிக்கை

மன்னார் மக்களுக்கு பொலிசார் விடுத்திருக்கும் பொது அறிவித்தலில் ஆட்கடத்தல் , சிறுவர்கள் கடத்தல் என்று சமூக வளைத்தளங்களில் பொய்யான வசந்திகள் பரப்பப்படுத்தப்பட்டு வருகின்றது. இவற்றை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்று மன்னார் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.

மன்னார் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விடுத்துள்ளச் செய்தியில் பொய் வதந்திகள் சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவும் அதாவது ஆட்கடத்தல் சிறுவர்கள் கடத்தல் போன்றவை பொய்பிரச்சாரமாக பரப்பப்பட்டு வருகின்றமையால் மன்னார் மக்கள் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.

ஆகவே பொதுமக்கள் இந்த விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வதந்திகள் பரப்புதல் அல்லது பரிமாற்றம் செய்வது குற்றமாகும்.

பொய் பிரச்சாம் செய்து எமது சிறார்களின் கல்விக்கு இடையூறு செய்ய வேண்டாம்.
மன்னாரில் பொதுமக்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு நலன் கருதி பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அடுத்து மன்னாரில் வீடுகள் உடைத்து திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுற்றுச் சூழல் மற்றும் உங்கள் வீடுகளிலுள்ள விலை மதிப்புள்ள பொருட்கள் மட்டில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

விலை மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பணம் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தங்கள் வீடுகளிலிருந்து தூர இடங்களுக்குச் செல்லுகின்றபோது உங்கள் வீடுகளில் நம்பிக்கையுடையோரை மட்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லுங்கள்.

வீட்டுக்கூரைகளில் ஏறி இறங்குவதற்கான வசதிகள் இருந்தால் அவற்றை அகற்றி விடுங்கள்.மன்னாரில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றமையால் உங்கள் வீடுகளிலும் சுற்றுச் சூழலையும் துப்பரவாக வைத்திருப்தில் அக்கறைக் காட்டுங்கள்.

உங்கள் வீடுகளுக்கு அருகாமையில் சந்தேகத்துக்குரிய விதத்தில் வாகனங்கள் தரித்து நின்றால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

பொலிசாருடன் தொடர்பு கொள்ளும் தொலைபேசி இலங்கங்கள் 023-2222222 அல்லது 023- 2222226 அல்லது 071-8591365 தொலை பேசிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.