காரைதீவின் இளங்கவிஞர் விபுலசசியின் நிலவின் கர்ப்பங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா இன்று (27) சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காரைதீவில் நடைபெற உள்ளது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொள்ளவுள்ளதுடன் தாதிய உத்தியோகத்தரான மனோகரன் சசிப்பிரியனின் கன்னி கவிதை நூல் என்பது குறிப்பிடத்தக்கது.