முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கல்

திருகோணமலை மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 50 ஆசிரியைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (25) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கே இப்பயிற்சிநெறி நடாத்தப்பட்டது.

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு உலக வங்கி நிதி அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரொஹான் பிரசாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.