கன்னன்குடாவில் மாபெரும் கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் சமூகவிஞ்ஞானப்பிரிவின் ஏற்பாட்டில் சமூக விஞ்ஞானக்கண்காட்சி கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நேற்று(2) வியாழக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரத்திக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற குறித்த கண்காட்சியில், கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் பிரதம அதிதிதாக கலந்து கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதன்போது பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் ஆரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், சிறப்புரையை நிகழ்த்தியுடன், கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தமையுடன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்று கண்காட்சியை பார்வையிட்டனர்.

வரலாற்றில் முதன்முறையாக இக்கண்காட்சி பெரியளவில் திட்டமிடப்பட்டு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சமூகவிஞ்ஞானப்பாட ஆசிரியர்களினால் பொன்னாடைப் போர்;த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.