மட்டக்களப்பில் பாதுகாப்பு நகரம்

மட்டக்களப்பு மாவட்டதில் கருவேப்பங்கனி கிராமத்தில் பாதுகாப்பு நகரம் உருவாக்குவதற்கான கலந்துரையாடல் தேவை நாடும் மகளிர் அமைப்பின் கிளை முகாமையாளர் சங்கிதா தர்மரஞ்சன் தலைமையில் YMCA மண்டபத்தில் இன்று (25) இடம் பெற்றது.

பாதுகாப்பு நகரம் ஒன்றை அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட கருவேப்பங்கேணி கிராமத்தை பாதுகாப்பு நகர (Safe City) செயற்திட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“வன்முறைக்கெதிரான வெற்றி” (WAV) செயற்திட்டம் தேவைநாடும் மகளிர் அமைப்பானது (WIN) யூஎஸ்எயிட் (USAID) இன் நிதி அனுசரனையில் மேற்கொண்டு வருகின்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட உதவி செயளாலர் ஆ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்எம்.எல் .சியாஹுல்ஹக், விரிவுரையாளர் இனோக்கா பிரியதர்சினி,தேவை நாடும் மகளிர் அமைப்பின் வன்முறைக்கெதிரான வெற்றி” (WAV) செயற்திட்டம் அதிகாரிகளான ஆர்.டிரசுமி, துஷாரினி, பிரிசாந்த, மாவட்ட செயலக மற்றும் மண்முனை வடக்கு சிறுவர் பெண்கள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோத்தர்கள், பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள், சுகாதார பரிசோதகர், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கருவேப்பங்கனி கிராம மட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.