தனது 31 வருட ஆசிரியர் சேவையில் இருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி ஓய்வுபெற்றுச்செல்லவுள்ள கணிதப்பாட ஆசிரியர் எம் ஏ சிறாஜுத்தீ, கல்விச் சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவர் கற்பித்த பாடசாலை மருதமுனை அல்மனார் மத்தியகல்லூரியில் இடம் பெற்றது.
இவர் 1992 ஆம் ஆண்டு முதல் நியமனத்தினை மருதமுனை சம்ஸ்மத்தியகல்லூரியில் பெற்று அதன் பின்னர் கல்முனை இஸ்லாமபாத் மற்றும் மருதமுனை அல்மனார் மத்தியகல்லூரியில் கணிதப்பாட ஆசிரியராகக் கற்பித்து பின்னர் சொற்பகாலம் கல்முனை அல்மிஷ்பா வித்தியாலயத்திலும் பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்திலும் கற்பித்து பல மாணவர்களை உயர்நிலைக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவராக இருக்கின்றார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியினை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம் மற்றும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் கற்று கணிதத்துறையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் தனது நியமனத்தினைப் பெற்று பலதரப்பட்ட மாணவர்களை வைத்தியத்துறை பொறியியல்துறை உட்பட உயர்நிலைக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.