மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதார வைத்தியசாலைகளில் தற்போதும் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் அடிப்படை சுகாதார சேவைகள் பிரிவின் உலக வங்கியின் செயற்றிட்ட பணிப்பாளர், வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியை நிவர்த்திப்பதற்காக சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய உலக வங்கியின் ஒதுக்கீட்டின் கீழ் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.