கொம்பனி வீதி கிராம உத்தியோகத்தர் (GN) பிரிவை மூன்று மொழிகளிலும் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் ‘கொம்பஞ்ஞ வீதிய’ கிராம உத்தியோகத்தர் பிரிவு சிங்கள மொழியில் ‘கொம்பஞ்ஞ வீதிய’ எனவும் தமிழ் மொழியில் ‘ஸ்லேவ்ஐலன்ட்’ எனவும், ஆங்கில மொழியில் “Slave Island” எனவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெயர் மும்மொழிகளிலும் ‘கொம்பஞ்ஞ வீதிய’ என அறிமுகப்படுத்துவது மிகப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை திருத்தம் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதன் மூலம் ‘கொம்பஞ்ஞ வீதிய’ என்பதை அவ்வாறே மும்மொழிகளிலும் வெளியிடுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவலகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.