( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த 6ம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ். கதிர்காம பாதயாத்திரைக்குழு நேற்று வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர்.
இன்று காலையில் சாம்பல் தீவு சல்லியம்மன் ஆலயத்தை தரிசித்து விட்டு கடல் மார்க்கமாக திருமலை நகரை அடைந்தனர்.அதனை தொடர்ந்து கடல் மார்க்கமாக இயந்திரப்படகு மூலம் திருமலை மூன்றாம் கட்டையை வந்தடைந்தனர். தொடர்ந்து புல்மோட்டை பிரதேசத்திலும் கடல் மார்க்கமாக பயணித்தமை குறிப்பிடத்தக்கது.