முனைக்காடு பாடசாலையில் இரத்த தானம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பித்து நேற்று(19) பாடசாலை மண்டபத்தில் இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதன்போது 50பேர் குருதியை கொடையாக வழங்கினர். இதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியினர் இதனைப் பெற்றுக் கொண்டனர்.

குறித்த பாடசாலையின் நூற்றாண்டை சிறப்பித்து பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகினறன. இதன் ஓர் அங்கமாக அண்மையில் வலயமட்டத்திலான ஆக்கத்திறன் நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.