இலங்கையின் தெற்குப் பகுதியில், பூவி ஈர்ப்பு விசையின் மிகக் குறைந்த புள்ளி காணப்படுவதாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இந்தியப் பெருங்கடலில் மலைத்தீவுக்கு கிழக்குப் பகுதியில் வடக்கு கனடாவில் உள்ள ஹட்சன் தடாகம் அருகே மிகக் குறைந்த புவியீர்ப்பு விசை காணப்படுவதாகவும் நாசா மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எடை குறைவாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், துருக்கியில் ஈர்ப்பு விசை அதிக எடையைக் காட்டுவதாக நாசா தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நியூசிலாந்தில் 68 கிலோவாகக் காட்டப்படும் ஒருவரின் எடை குறைந்த புவியீர்ப்பு உள்ள பகுதிகளில் 3 முதல் 6 கிராம் வரை குறைவாக இருக்குமென நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதேவேளை, பூமியின் மேலோட்டத்தின் தடிமன் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள உருகிய பாறை மற்றும் மாக்மாவின் அளவு ஆகியவற்றிலும் வேறுபாடு இருக்கும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளானர்.