மாணவர்களுக்கான சீனாவின் அன்பளிப்பு

[எப்.முபாரக்]

திருகோணமலைக்கு விஜயம் செய்த சீன நாட்டின் யுனான் மாகாண ஆளுநர் “சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து அன்பளிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் திருகோணமலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கான புத்தக பைகளை வழங்கி வைத்தார். இன்று (19) காலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக்கல்விப் பணிப்பாளர். திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர், வித்தியாலய அதிபர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.