ஜனக ரத்நாயக்கவின் பதவிப் பறிக்கப்படுகிறது? ஜனகவால் மொட்டு கட்சியில் குழப்பம்

இம்மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழு தீர்மானித்துள்ளது

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகள் தவிர நாடாளுமன்றம் கூடும் ஏனைய நாட்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரத்தை ஒதுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7ஆம் பிரிவின்படி தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர் ஜே.டபிள்யு.எம்.ஜே.பி.கே. ரத்நாயக்கவை அந்த உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த பிரேரணையை அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையில்,இதற்கு ஆதரவாக வாக்களிப்பதா? இல்லையா? என்பதுத் தொடர்பில் ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவன் செய்திப் பிரிவுக்குக் கிடைத்தத் தகவல்கள் உறுதி செய்கின்றன.