தலைமன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

தலைமன்னாரில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வடிவமைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டது.

குறித்த நிகழ்வில் பொதுமக்கள் இளைஞர்கள் சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.