மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி, வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் ஆகியோரும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.