கதிர்காமம் ஆடிவேல் விழா பேருற்சவம் யூன் 19 இல் ஆரம்பம்.

(வி.ரி. சகாதேவராஜா)
 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா பேருற்சவம் ஜுன் 19 இல் ஆரம்பமாகிறது.
கன்னிக்கால் நடும் வைபவம் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறும்.
  ஜூன் 19 ஆம் தேதி திருவிழா பெரஹர ஊர்வலம் ஆரம்பமாகி இறுதி ஊர்வலம் பெரஹரா
யூலை 03 ஆம் தேதி நடைபெறும் .

2023 வருடாந்த திருவிழா யூலை 4 ஆம் தேதி கதிர்காமம் மாணிக்ககங்கையில்
 ஜீவமாலி படகில் நீர் வெட்டு திருவிழாவுடன்( தீர்த்தம்) நிறைவுபெறும் என கதிர்காம தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்து பஞ்சாங்கங்கள் மற்றும் நாட்காட்டிகளில் யூலை 17இல் ஆரம்பமாகி ஆகஸ்ட் 2ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது என்று குறிப்பிடப்படுகிறது.
புதிய அறிவித்தலின்பிரகாரம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் செல்லும் இலங்கையின் அதிநீண்ட 55 நாட்கள் கொண்ட பாதயாத்திரை ஆரம்பமாகும் திகதி மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாட்டின் பல பாகங்களில் இருந்து கதிர்காமம் வரை  பயணிப்போரின் நடைமுறை மாறுபடவுள்ளது.