மீண்டும் ஒன்று கூடும் தொழில்வல்லுநர்கள்

தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று மீண்டும் கூடவுள்ளது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சுகாதாரம், பல்கலைக்கழகங்கள், வங்கி மற்றும் பொறியியல் உட்பட பல துறைகளைச் சேர்ந்த 47 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு செலுத்தும் வரி உள்ளிட்ட வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.