மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் முதலாவது காலாண்டிற்கான சிறுவர்கள் நலன் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்த  கலந்துரையாடல்
அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (28) இடம் பெற்றது.

சிறுவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பில்
வலயக்கல்வி அலுவலகங்கள் அவசியம் மாவட்ட கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கான பிறப்பு பதிவினை பெற்றுக்கொள்ள வேண்டிய  ஏற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் மாதாந்தம் கிராமிய மட்டங்களில் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும்  போன்ற விடயங்கள் அரசாங்க அதிபரினால் எடுத்து கூறப்பட்டது.

14 பிரதேச செயலாளர்களர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்களிடம் இருந்து மாணவர்களின்  இடைவிலகல் தொடர்பாகவும்,இடைவிலகலை குறைப்பதற்கு பிரதேச செயலகங்கள் செயற்பட  வேண்டும் மற்றும்
இடைவிலகிய மாணவர்களை மீளச்சேர்த்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தரினாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

பாடசாலை ரீதியான தகவல்கள் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிற்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.

மாணவர்களின் கல்விக்காக கட்டாயக்கல்விக்குழு மற்றும் பாடசாலைக்கல்விகுழு கட்டாயம் செயப்படவேண்டும் 16 வயது வரை விருப்பத்துடனோ அல்லது விரும்பம் இல்லாவிட்டாலும் கல்வி கற்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இக்குழு செயப்பட வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார  வைத்திய  அலுவலகத்தின் உளநல வைத்திய அதிகாரி டான் செளந்தரராஜா மற்றும் பிரதேச செயலாளர்களர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள் ,வலய கல்வி பணிப்பாளர்கள்,பொலிஸ்அதிகாரிகள்,துறைசார் நிபுணர்கள்,செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.